பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்து கொள்ளாத அரச அதிகாரிகளுக்கு கடும் நடவடிக்கை

பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துகொள்ளாத அரசாங்க அதிகாரிகளுக்கெதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென பிரதமர் அலுவலக பிரதானியும் துறைமுகங்கள் கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சருமான சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

தெனியாய, கொட்டபொல அபிவிருத்தி தொடர்பாடல் குழுக் கூட்டம் அதன் தலைவரான அமைச்சர் சாகல ரத்னாயக்க தலைமையில் (27) கொட்டபொல பிரதேச சபையில் நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  

இக் கூட்டத்தில் ​பேசிய அமைச்சர் ' அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துகொள்ளாத அரசாங்க அதிகாரிகள் தொடர்பிலும் அமைச்சர் இங்கு கவனம் செலுத்தினார். இக்கூட்டத்திலுள்ள குறையொன்றை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. அதாவது ஒரு சில அதிகாரிகள் இவ்வாறான கூட்டங்களில் கலந்துக்கொள்வதில்லை என்பதை நான் அவதானித்தேன். ஜனாதிபதியே என்னை பிரதேச அபிவிருத்தி  குழு கூட்டத்தின் தலைவராக நியமித்தார்.

எனவே இக்கூட்டத்தில் கலந்து கொள்ளாத அதிகாரிகளுக்கு எதிர்வரும் கூட்டங்களில் கலந்துகொள்ளுமாறு அறிவிப்போம். அவ்வறிவித்தலையும் பொருட்படுத்தாது கலந்து கொள்ளவில்லையாயின் அவர்களின் பெயர் பட்டியலை ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளித்து கலந்துகொள்ளாத அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையெடுக்க நேரிடும்.

அபிவிருத்திக் குழு கூட்டங்கள் அனைத்திலும் கலந்துகொள்ளும் அதிகாரிகளுக்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்' என்றார்.

Sat, 06/29/2019 - 14:35


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை