முறைப்பாடுகளை பதிய பொலிஸ் ஆணைக்குழுவில் இணையம் அறிமுகம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் பொது மக்கள் தமது முறைப்பாடுகளைச் செய்வதற்குப் புதிய இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் தங்களின் முறைப்பாடுகள் தொடர்பில் துரிதமான தீர்வினைப் பெற்றுக்ெகாள்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்தது.  

இந்த இணையத்தள அறிமுகம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று (28) வைபவ ரீதியாக நடைபெற்றது. கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் பி.எச்.மனத்துங்க, செயலாளர் சமன் திசாநாயக்க முதலானோர் கலந்துகொண்டனர். பொதுமக்கள் தமது பிரச்சினைகள் தொடர்பில் பொலிஸுக்குச் செய்யும் முறைப்பாடுகள் திருப்தியாகத் தீர்க்கப்படாவிட்டால் அல்லது தீர்வைப் பெற்றுக்ெகாடுப்பதில் தாமதம் ஏற்படுத்தப்பட்டால் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்து தீர்வைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கின்ற போதிலும் அதில் மக்கள் நடைமுறைச் சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர். இந்தச் சிக்கலைத் தவிர்த்துப் பொலிஸ் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்வதற்கு இந்தப் புதிய நடைமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி பொதுமக்கள் www.npc.gov.lk என்ற இணையத்தளத்திற்குத்  பிரவேசிப்பதன் மூலம் முறைப்பாடுகளைப் பதிவு செய்யலாம்.

போல் வில்சன்

Sat, 06/29/2019 - 14:27


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை