இஸ்ரேலின் தாக்குதலை சிரிய படை முறியடிப்பு

தெற்கு சிரியாவின் தால் அல் ஹரா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை சிரியா முறியடித்து அதன் ஏவுகணைகளை சுட்டுவீழ்த்தியதாக சிரிய அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

டெரா நிர்வாகப் பிரிவுக்கு உட்பமட்ட தால் அல் ஹரா மூலோபாய முக்கியம் வாய்ந்த பிராந்தியமாக கருதப்படுகிறது. மலைப்பிரதேசமான இங்கிருந்து ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் குன்று பகுதியை கண்காணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ராடார்களை இடைமறிக்கும் மின்னணுப் போரிலும் இஸ்ரேல் ஈடுபட்டதாக சிரிய அரச ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேல் போர் விமானங்கள் கோலன் குன்றுக்கு அருகில் நடத்திய தாக்குதல்களில் மூன்று சிரிய படையினர் கொல்லப்பட்டு மேலும் ஏழு பேர் காயமடைந்த சம்பவத்திற்கு ஒரு வாரத்திற்கு பின்னரே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

எனினும் சிரியாவின் ஹர்மோன் மலையில் இருந்து இரு ரொக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்கு பதிலடியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

ஈரான் மற்றும் அதன் கூட்டணிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் கடந்த காலங்களில் சிரியாவில் பல தாக்குதல்களையும் நடத்தியுள்ளது.

சிரியாவில் 370,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட எட்டு ஆண்டுகள் நீடிக்கும் சிரிய உள்நாட்டு யுத்தத்தில் ஜனாதிபதி பஷர் அல் அஸாத்துக்கு ஆதரவாக ஈரான் செயற்பட்டு வருகிறது.

Thu, 06/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை