பறக்கும் டெக்ஸி சேவை ஆரம்பம்

வான்போக்குவரத்து டெக்ஸி சேவைக்கான சோதனை ஓட்டக் களமாக அவுஸ்திரேலியாவின் மெல்பர்னை ஊபர் நிறுவனம் தேர்ந்தெடுத்துள்ளது.

ஸ்மார்ட் போன்களில் வாடகைக் கார்களை பதிவு செய்து பயணிக்கும் சேவையை உலகின் பல நாடுகளில் ஊபர் நிறுவனம் வழங்கி வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவுக்கு வெளியே துபாய்க்கு அடுத்த படியாக மெல்பர்னை தேர்ந்தெடுத்து டேக்ஸி ஹெலிகொப்டர் அல்லது விமான சேவையை வழங்குவது குறித்து சோதித்துப் பார்க்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மெல்பர்னின் பிரபல கடைத்தொகுதியில் இருந்து சர்வதேச விமான நிலையத்துக்குச் செல்ல 25 நிமிடங்கள் ஆகும். அதே 17 கிலோ மீற்றர் தூரத்தை பத்தே நிமிடத்தில் கடக்கும் வகையில் ஏர் டேக்ஸி சேவை அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் சோதனை விமான சேவை 2020 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படவிருப்பதோடு 2023 ஆம் ஆண்டு வர்த்தக ரீதியான பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

Thu, 06/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை