தவறான சிறுவனை மகனாக வளர்த்த சீனத் தாய் வழக்கு

சீனாவில் 20 ஆண்டுகளுக்கு மேல் தம்முடைய மகன் என்று நினைத்து வேறொரு சிறுவனை வளர்த்த பெண் அது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

சொங்சிங் நகரில் வசிக்கும் 53 வயது சு சியெளஜுவானின் மகன் பான்பான் 1992இல் காணமற்போனார். அப்போது மகனுக்கு வயது 1.

மூவாண்டுத் தேடல் முயற்சிகளுக்குப் பின் ஹெனான் வட்டாரத்தில் கடத்தப்பட்ட பிள்ளைகள் மீட்கப்பட்ட குழுவில் தன் மகனைப் போன்ற சிறுவனைக் கண்டார் சு.

பல்வேறு மருத்துவ சோதனைகளுக்குப் பின் குழுவில் இருந்தது சுவின் மகன் என்று நீதிமன்றம் நிர்ணயித்தது.

கடந்த ஆண்டு ஜனவரி வரை அந்தப் பிள்ளையைத் தம்முடைய மகன் என்று நினைத்து வளர்த்து வந்தார் சு. ஆனால் சுவின் வீட்டில் முன்பு குழந்தை பராமரிப்பாளராகப் பணிபுரிந்த பெண்தான் சுவின் மகனைக் கடத்தியதாக அண்மையில் ஒப்புக்கொண்டுள்ளார்.

சுவின் மகனை திரும்பக் கொடுக்கவும் அவர் முன்வந்துள்ளார்.

சு குழந்தை பராமரிப்பாளரைப் பற்றி பொலிஸாரிடம் புகார் செய்துள்ளார். அதே வேளையில் நீதிமன்றத்திடம் இழப்பீடு கேட்டு அவர் வழக்கும் தொடுத்துள்ளார்.

வேறொரு பிள்ளையைத் தம்பிள்ளைபோல் வளர்த்ததால் ஏற்பட்ட செலவு, மன வேதனை ஆகியவற்றைக் காரணம் காட்டி நீதிமன்றத்திடமிருந்து 2.95 மில்லியன் யுவான் இழப்பீடு கோரியுள்ளார்.

மேம்படுத்தப்படாத தொழில்நுட்பத்தால் குழப்பம் ஏற்பட்டதாக நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்நிலையில், தன்னை வளர்த்த சுவையே தாயாக கருதுவதாக அவருடைய வளர்ப்பு மகன் கூறுகிறார்.

Wed, 06/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை