சிரியாவின் இத்லிப்பில் ரஷ்யா வான் தாக்குதல்: 25 பேர் பலி

சிரியாவின் இத்லிப் பிராந்தியத்தில் கடந்த திங்கட்கிழமை ரஷ்ய போர் விமானங்கள் நடத்திய வான் தாக்குதல்களில் குறைந்தது 25 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.

ஜபலால் கிராமத்தின் மீது ரஷ்ய சுகொய் ஜெட்கள் குண்டு வீசியதை அடுத்து பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டதாக குடியிருப்பாளர்கள் மற்றும் சிவில் மீட்பாளர்கள் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டனர்.

சிறு நகரான கான் செய்கூன், கப்ர் தபத்திக் மற்றும் பல கிராமங்கள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல்களில் மேலும் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் தொடக்கம் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டில் இருக்கும் வட மேற்கு சிரியா மீது சிரிய அரச படை மற்றும் ரஷ்யா நடத்தி வரும் தீவிர தாக்குதல்களில் 1,500 பேருக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு இதில் பாதிக்கும் அதிகமானவர்கள் பொதுமக்கள் என மீட்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சுமார் மூன்று மில்லியன் மக்கள் வசிக்கும் இந்தப் பிராந்தியத்தில் முழுமையான யுத்தம் ஒன்று வெடித்தால் பாரிய மனிதாபிமான அவலம் ஏற்படும் என்று அச்சம் வெளியாகியுள்ளது.

Wed, 06/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை