தாய்வானுக்கு ஆயுதங்கள் விற்க அமெரிக்கா திட்டம்

தாய்வானுக்கு 2 பில்லியன் டொலருக்கு மேல் பெறுமதியுள்ள ஆயுதங்களை விற்க அமெரிக்கா தயாராகி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. அது சீனாவின் சினத்தைத் தூண்டும் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தகப் போர் தீவிரமடைந்துவரும் நிலையில், தாய்வானுக்கு ஆயுதங்களை விற்கும் நடவடிக்கையில் அமெரிக்கா இறங்கியுள்ளது.

யுத்த தாங்கிகளையும் ஆயுதங்களையும் வாங்குவதற்கான தாய்வானின் கோரிக்கை, அமெரிக்க பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும் அந்தத் தகவலை அமெரிக்க அராசங்கம் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

தாய்வானுடன் அமெரிக்கா அதிகாரத்துவ உறவுகள் ஏதும் கொண்டிருக்கவில்லை.

ஆனால், தாய்வானுக்கு ஆயுதங்களை விநியோகிக்கும் முக்கியத் தரப்பதாக அமெரிக்கா திகழ்கிறது. அமெரிக்காவிடம் இருந்து மேலும் ஆயுதங்களைப் பெற்றுக்கொள்ளும் தனது நோக்கம் பற்றி தாய்வான் முன்னதாக அறிவித்தது. சீனாவின் தூண்டுதல் நடவடிக்கைகளுக்கு எதிராகத் தன்னைத் தற்காத்துக்கொள்ள ஆயுதங்களைப் பெற்றுக்கொள்வதாக தாய்வான் கூறியது.

Fri, 06/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை