எத்தியோப்பிய இராணுவ தளபதி சுட்டுக் கொலை

எத்தியோப்பிய இராணுவத் தளபதி ஜெனரல் சீரே மெக்கொனன் தலைநகர் அடிடாஸ் அபாபாவில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

எத்தியோப்பியாவின் வடக்கு அம்ஹாரா பிராந்திய நிர்வாகத்திற்கு எதிரான இராணுவ சதிப்புரட்சி ஒன்றை தடுக்க முயன்ற நிலையிலேயே இராணுவத் தளபதி மற்றும் மற்றொரு அதிகாரி கொல்லப்பட்டதாக பிரதமர் அபி அஹமட் குறிப்பிட்டார்.

அம்ஹரா பிராந்தியத்தின் ஆளுநர் அவரது ஓட்டுநருடன் கொல்லப்பட்டார். எத்தியோப்பியாவின் அம்ஹாரா மற்றும் ஏனைய பிராந்தியங்களில் அண்மைய ஆண்டுகளில் வன்முறைகள் அதிகரித்துள்ளன.

இந்தக் கொலைக்கு இராணுவச் சீருடையில் இருந்தவர்கள் மீது பிரதமர் தனது தொலைக்காட்சி உரையில் குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு பிரதமராக தேர்வானது தொடக்கம் பிரதமர் அபி, அரசியல் கைதிகளை விடுவித்தும் அரசியல் கட்சிகள் மீதான தடைகளை அகற்றியும் அரசியல் ஒடுக்குமுறைகளை முடிவுக்குக் கொண்டுவந்தார்.

இதில் இராணுவத் தளபதி மற்றும் மற்றொரு ஜெனரலான கெசாய் அபேரே மெய்க்காவலர் ஒருவராலேயே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேபோன்று அம்ஹாரா பிராந்திய ஆளுநர் லேக் அயாலோ அவரது மூத்த ஆலோசகர் ஆகியோரும் சுட்டுக் கால்லப்பட்டுள்ளனர். பிராந்தியத்தின் பதில் ஆளுனராக அயாலோ அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தார். அம்ஹாரா பிராந்திய பாதுகாப்பு தலைவர் அசாமினோ டிசிகே சதிப்புரட்சியில் ஈடுபட்டிருப்பதாக பிரதமர் அலுவலகம் குற்றம்சாட்டியுள்ளது.

Mon, 06/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை