ஜோர்ஜியாவுக்கான ரஷ்ய விமான சேவை நிறுத்தம்

ஜோர்ஜியா செல்லும் விமானச் சேவைகளுக்கு ரஷ்யா தற்காலிகமாகத் தடை விதித்துள்ளது.

டிபிளீசியில் உள்ள ஜோர்ஜிய பாராளுமன்றத்தில், ரஷ்ய பாராளுமன்ற உறுப்பினர் உரையாற்றியது தொடர்பில் கலவரம் மூண்டதைத் தொடர்ந்து அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 8ஆம் திகதியிலிருந்து தடை நடப்பிற்கு வரும். அதை உறுதிப்படுத்தும் ஆணையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கையெழுத்திட்டுள்ளார்.

ரஷ்யாவுக்கும் ஜோர்ஜியாவுக்கும் இடையே நீண்ட காலமாக பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில் ரஷ்ய பாராளுமன்ற உறுப்பினரான செர்ஜெய் காவ்ரிலோ கடந்த வியாழக்கிழமை ஜோர்ஜிய பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவரது உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாராளுமன்றக் கட்டிடத் திற்கு வெளியே வெள்ளிக்கிழமை திரண்ட ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜோர்ஜியாவில் ரஷ்யா தலையிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கூச்சலிட்டனர்.

அந்த ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து ஜோர்ஜியா பாராளுமன்ற சபாநாயகர் இராகிலி கோபாக்கிட்ஸ் பதவி விலகினார். தெற்கு ஒசட்டியா பிராந்தியத்திற்காக இரு நாடுகளும் யுத்தம் செய்து 11 ஆண்டுகள் கடந்த நிலையிலும் தொடர்ந்தும் பதற்றம் நீடித்து வருகிறது.

Mon, 06/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை