கசக் ஜனாதிபதி தேர்தலில் டொகாயெவ் அமோக வெற்றி

கசகஸ்தானில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் இடைக்கால ஜனாதிபதி காசிம் ஜொமார்ட் டொகாயெவ் 71 வீத வாக்குகளை வென்று வெற்றி பெற்றிருப்பதாக மத்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.

எண்ணெய் வளம் கொண்ட கசகஸ்தானில் கடந்த மூன்று தசாப்தங்களாக பதவியில் இருந்த ஜனாதிபதி நூர்சுல்தான் நசர்பயெவ் பதவி விலகிய நிலையிலேயே கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தத் தேர்தல் நடைபெற்றது.

கடந்த மார்ச் மாதம் நசர்பயெவ் பதவி விலகிய பின் இடைக்கால ஜனாதிபதியாக 66 வயது டொகாயெவ் பதவி வகித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தல் நியாயமற்றது எனக் கூறி இரண்டு நகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 500 பேரை பொலிஸார் கைது செய்தனர்.

இந்தத் தேர்தலில் டொகாயெவுக்கு நெருங்கிய போட்டியாளராக இருந்த அமிர்சான் கொசனவ் 15 வீத வாக்குகளையே பெற்றார்.

கசகஸ்தானின் எந்த ஒரு தேர்தலையும் முழுமையான ஜகநாயக தேர்தல் என ஐரோப்பாவின் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்காக அமைப்பு அங்கீகரித்ததில்லை.

Tue, 06/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை