அவசரகால சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு

அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது. வாக்கெடுப்பின்றி இது நேற்று நிறைவேற்றப்பட்டது.

அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது தொடர்பான விவாதம் நேற்று முழுநாளும் நடைபெற்றது. ஆளும் கட்சி , எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதரவாக உரையாற்றியிருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் எதிர்த்து உரையாற்றினார்.

அது மாத்திரமன்றி முஸ்லிம் உறுப்பினர்கள் பலரும் அவசரகாலச் சட்டத்தினால் முஸ்லிம் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக குற்றஞ்சாட்டினர்.

எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுக்குப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன பதிலளித்து உரையாற்றினார். அவரின் உரையைத் தொடர்ந்து அவசரகாலச் சட்டத்தை நிறைவேற்றுவதாக சபாநாயகர் அறிவித்தார். ஆரம்பத்தில் எவரும் எதிர்த்திருக்காத நிலையில், சட்டம் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்த பின்னர், கூட்டமைப்பினர் வாக்கெடுப்பு கோரினர். ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளபோதும் உங்களுடைய எதிர்ப்பினையும் பதிவுசெய்துகொள்வதாக சபாநாயகர் மேலும் குறிப்பிட்டார்.

சபை நிருபர்கள்

Fri, 06/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை