றக்பி வீரர் தாஜுதீன் கொலை வழக்கு; முன்னாள் டிஐஜி அநுரவுக்கு குற்றப்பத்திரம்

முன்னாள் றக்பி வீரர் வாசிம் தாஜுதீனின் கொலை தொடர்பான சான்றுகளை மறைக்க முயன்றதாக முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்க மீது கொழும்பு உயர்நீதிமன்றம் நேற்று குற்றப்பத்திரிகையை வழங்கியது.

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க நேற்று நீதிமன்றத்துக்கு சமுகமளித்திருந்தார். ஒரு மில்லியன் ரூபா ரொக்கப் பிணையிலும் இரண்டு மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு பேரின் சரீரப் பிணையிலும் அவரை உயர் நீதிமன்ற நீதிபதி விகும் கலுஆரச்சி விடுதலை செய்தார். அத்துடன் நீதிமன்றத்தின் அனுமதி இன்றி அவர் வெளிநாடு செல்வதை நீதிமன்றம் தடை செய்ததுடன் அவரது கடவுச் சீட்டை நீதிமன்றத்தின் பொறுப்பில் வைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

அதேநேரம் இந்த வழக்கு எதிர்வரும் அக்டோபர் 23 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முன்னாள் றக்பி வீரரான தாஜுதீன் 2012 மே மாதம் கொழும்பில் வைத்து வீதி விபத்தில் கொல்லப்பட்டார்.

Fri, 06/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை