மாற்று மரத்தை டிரம்புக்கு அனுப்புகிறார் மெக்ரோன்

வெள்ளை மாளிகையில் நட்ட ‘நட்பு மரம்’ பட்டுப்போய்விட்டதால் அதற்கு பதில் மாற்று மரம் ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு அனுப்பவிருப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மெக்ரோன் குறிப்பிட்டுள்ளார்.

இரு நாட்டுத் தலைவர்களும் கடந்த ஆண்டு வெள்ளை மாளிகை முற்றவெளியில் ஓர்க் மரக்கன்றை நட்டனர். அமெரிக்கா மற்றும் பிரான்ஸுக்கு இடையிலான நட்புறவின் அடையாளமாகவே அந்த மரம் நடப்பட்டது.

அந்த மரக்கன்று தோண்டி எடுக்கப்பட்டு தனிமையில் வைக்கப்பட்ட நிலையில் அது பட்டுப்போயுள்ளது.

இது குறித்து சமூகதளத்தில் வெளியான கருத்துகளுக்கு பதிலளித்திருக்கும் மெக்ரோன், மக்கள் எல்லாவற்றையும் சமிக்ஞைகளாக பார்க்கக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

“இது ஒரு பேரழிவு இல்லை, அவருக்கு நாம் மற்றொன்றை அனுப்புவோம்” என்று மக்கோரான் சுவிஸ் ஒலிபரப்புச் சேவைக்கு குறிப்பிட்டிருந்தார்.

ஈரானுடனான வர்த்தக மற்றும் அணு சக்தி உடன்படிக்கை குறித்து இரு தலைவர்களுக்கும் இடையில் அண்மையில் முரண்பாடு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Thu, 06/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை