5ஜி தொழில்நுட்பத்தை மேம்படுத்த ரஷ்யாவுடன் ஹுவாவி உடன்படிக்கை

ரஷ்யாவில் 5ஜி தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கு ரஷ்ய தொலைத்தொடர்பு நிறுவனமான எம்.டீ.எஸ் உடன் ஹுவாவி உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது.

அடுத்த ஆண்டி ஹுவாவி நிறுவனம் ரஷ்யாவில் அடுத்த தலைமுறை 5ஜி தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் என்று செய்தி வெளியாகியுள்ளது.

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ரஷ்யாவுக்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையிலேயே இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

பாதுகாப்பை காரணம் காட்டி அமெரிக்காவின் தலைமையில் சில மேற்குலக நாடுகள் சீன நிறுவனத்தின் மீது தடைகள் கொண்டுவந்திருக்கும் நிலையிலேயே இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அண்மைய மாதங்களில் சர்வதேச அளவில் நெருக்கடிக்கு முகம்கொடுத்திருக்கும் ஹுவாவி நிறுவனத்திற்கு இந்த உடன்படிக்கை ஆறுதலாக அமைந்துள்ளது.

சீனா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தகப் போரில் ஹுவாவி நிறுவனம் மையப்புள்ளியாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Fri, 06/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை