35 டொலர் கணனி மூலம் நாசா ஆய்வகம் ஊடுருவல்

35 டொலர் பெறுமானமுள்ள கணனியைக் கொண்டு நாசாவின் ஆய்வுக் கூடம் ஊடுருவப்பட்டுள்ளது.

முக்கியமான தகவல்கள் ஊடுருவப்பட்டதுடன் விண்வெளிப் பயணக் கட்டமைப்புகளுடனான தொடர்பும் தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டது.

சுமார் ஓராண்டுக்குத் தகவல்கள் ஊடுருவப்பட்டன. சம்பவத்துக்குப் பொறுப்பான நபரைத் தேடும் முயற்சிகள் தொடர்கின்றன.

ஊடுருவல்காரர் பயன்படுத்திய கணனி, கடன்பற்று அட்டை அளவு மட்டுமே இருக்கும். அது சிறுவர்களுக்குக் கணினியியல் கற்பிக்க உதவுகிறது.

ஊடுருவல் கண்டறியப்படும் முன் ஊடுருவல்காரர் சுமார் 23 ஆவணங்களை எடுத்ததாகக் கூறப்படுகிறது. செவ்வாய் கிரக விண்வெளி ஆய்வின் தகவல்கள் அவற்றில் அடங்கும்.

நாசாவின் கட்டமைப்பு நிர்வாகம் மென்பொருளைப் புதுப்பிக்காததால், மற்ற கருவிகள் கட்டமைப்புக்குள் அனுமதிக்கப்பட்டன.

Wed, 06/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை