இலங்கை - அமெரிக்கா சோபா (Sofa) ஒப்பந்தம் இறைமைக்கு தீங்கு விளைவிக்காது

- அமெரிக்கத் தூதுவர் அலெய்னா  

இலங்கை - அமெரிக்கா இடையே கைச்சாத்திடப்படவுள்ள சோபா (Sofa) ஒப்பந்தம் இலங்கையின் இறைமைக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் இருக்காது என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். இவ்வொப்பந்தம் இராணுவ பயிற்சி மற்றும் கூட்டுறவு உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டுள்ளது.  

குறிப்பிட்ட இந்த ஒப்பந்தம் இன்னும் கைச்சாத்திடப்படவில்லை. இது தொடர்பாக இரு நாடுகளும் இன்னும் பேசி வருகின்றன. இரு நாடுகளும் ஓர் இணக்கத்துக்கு வந்த பின்னர் அஃது இணையத்தில் வெளியிடப்படும் என்று அவர் மேலும் கூறினார்.  

அமெரிக்கத் தூதுவர் கடந்த 23ஆம் திகதி மல்வத்தை பீடாதிபதி வண. திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த மகாநாயக்க தேரரையும் அஸ்கிரிய பீடாதிபதி அதிகாரிகள் பலரும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.  

இதன்போது கருத்துத் தெரிவித்துள்ள அமைச்சர் ராஜித சேனாரத்ன,  

கடந்த வருடத்தில் இறுதிப்பகுதியில் நாட்டில் இடம்பெற்ற அரசியல் குழப்பகரமான காலங்களில் 216 மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் பாதிப்பு இன்று வரை தொடர்கிறது.  

கடந்த வருடத்தின் இறுதிப் பகுதியில் நாட்டில் நிலவிய குழப்பகரமான சூழ்நிலையின் போது திட்டமிடல் அமைச்சின் குழறுபடி நிலை காரணமாக ஆஸ்பத்திரிகளுக்கு முறையாக மருந்துகள் வழங்கப்படவில்லை. அக்காலத்தில் மேற்படி மருந்துகள் தட்டுப்பாட்டுக்குள்ளானது. 52 நாட்கள் தொடர்ந்த அரசியல் நெருக்கடியில் எந்தவொரு கேள்விப்பத்திரமும் கோரப்படவில்லை. அதேவேளை, எந்த மருந்துப் பொருட்களும் இறக்குமதி செய்யப்படவுமில்லை. இந்நிலையில், தற்போது நிலவும் சிறு அளவிலான மருந்து தட்டுப்பாட்டுக்கு விரைவான நடவடிக்கை எடுக்கவேண்டுமென அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். (ஸ)

Tue, 05/28/2019 - 11:32


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை