குருணாகல் வைத்தியருக்கு எதிரான விசாரணைக்கு 6 பேர் கொண்ட குழு

குருணாகலில் கைதுசெய்யப்பட்ட மகப்பேற்று வைத்தியர் தொடர்பில் விசாரணை செய்வதற்காக 6 பேர் கொண்ட குழு நியமனம் செய்யப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா   தெரிவித்தார்.

முஹம்மட் சாபி சிஹாப்தீன் (42) எனும் குறித்த வைத்தியருக்கு எதிராக விசேட வைத்திய நிபுணர் அனில் சமரநாயக்க தலைமையிலான 6 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேராவினால் நியமிக்கப்பட்ட குறித்த குழுவிடம்,  ஒரு மாதத்திற்குள் தமது ஆரம்பக்கட்ட அறிக்கையை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நிர்வாக சேவை உத்தியோகத்தர் எல்.ஏ. பஸ்நாயக்க, ஓய்வுபெற்ற மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் லக்‌ஷ்மன் சேனாநாயக்க, மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் யூ.டி.பி.ரத்னசிறி,  சமூக விசேட வைத்திய நிபுணர் சஞ்ஜீவ கொடகந்தகே, விசாரணை அதிக◌ாரி எஸ்.ஐ. குணவர்தன ஆகியோர் இக்குழுவில் அடங்குகின்றனர். 

குருணாகல் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும்  முஹம்மட் சாபி சிஹாப்தீன் (42) எனும்  வைத்தியரே  சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்து சேகரித்த குற்றச்சாட்டில் கடந்த 24 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்தார்.

Tue, 05/28/2019 - 10:33


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை