குருணாகல் வைத்தியர் மீது முறைப்பாடுகள் இருப்பின் CID யை நாடவும்

RSM
குருணாகல் வைத்தியர் மீது முறைப்பாடுகள் இருப்பின் CID யை நாடவும்-Dr Shafi Shihabdeen-Gynecologist Arrested Complaints Kurunegala

இது வரை இரு பெண்கள் வைத்தியசாலையில் முறைப்பாடு

குருணாகல் வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் ஷாபி சிஹாப்தீன் தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின், அவற்றை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் இன்று (26) மாலை இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டின்போதே, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

மேற்படி மருத்துவர் 8,000 சிசேரியன் மகப்பேறுகளை மேற்கொண்டுள்ளதாகவும் அதில் 4,000 பௌத்த பெண்களுக்கு சிசேரியனுடன் கருத்தடை மேற்கொண்டுள்ளதாகவும் என, தெரிவித்து 'திவய்ன' எனும் சிங்கள பத்திரிகை அண்மையில் பிரதான தலைப்பு செய்தியை வெளியிட்டதையடுத்து மக்கள் மத்தியில் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.

ஆயினும் சந்தேகத்திற்கிடமான முறையில் அதிகளவு சொத்து வைத்திருந்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர் குருணாகல் வைத்தியசாலையின் மருத்துவர் செய்கு சியாப்தீன் மொஹம்மட் ஷாபி சி. ஐ. டி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவரால் சிசேரியன் செய்யப்பட்ட போது கருத்தடை மேற்கொள்ளப்பட்டமையினால் பாதிக்கப்பட்வர்கள் எவரேனும் இருப்பின் அவர்கள் CID யினரிடம் முறைப்பாட்டை பதிவு செய்யுமாறு பொலிஸ் தலைமையகம் வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

குருணாகல் வைத்தியசாலையின் மகப்பேற்று சத்திரசிகிச்சை மருத்துவ நிபுணரான 42 வயதுடைய செய்கு மொஹம்மட் ஷாபி சிஹாப்தீன் அதிகளவு சொத்து குவித்த குற்றச்சாட்டிற்கு அமைய, கடந்த வெள்ளிக்கிழமை (24) குருணாகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக சி. ஐ. டியினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்நிலையில் குறித்த வைத்தியருக்கு எதிராக, இன்றையதினம் (26) இரு பெண்களினால், குருணாகல் வைத்தியசாலையின் நிர்வாகத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இருவரும் வாரியபொல மற்றும் குருணாகல் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

(ஸாதிக் ஷிஹான்)

Sun, 05/26/2019 - 20:57


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை