வன்முறை சம்பவங்களின் பின்புலத்தில் திட்டமிட்ட

அரசியல் நிகழ்ச்சி நிரல்

வடமேல் மாகாணத்தில் நடத்தப்பட்டுள்ள வன்முறை சம்பங்களின் பின்புலத்தில் தெளிவாக திட்டமிடப்பட்ட அரசியல் நிழ்ச்சி நிரலொன்று உள்ளதாக தெரிவித்த ஜாதிக ஹெல உருமய, கைதுசெய்யப்பட்டவர்களின் பின்புலத்தை வைத்து வன்முறை சம்பவங்களுக்கு யார்

காரணமென மக்கள் புரிந்துகொள்ளலாம் என்றும் அக்கட்சிக் கூறியது.

நாட்டில் பாதுகாப்பற்ற சூழல் காணப்படுவதாக மக்களை தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி களேபரங்களை தோற்றுவித்து அதன்மூலம் அரசியல் இலாபங்களை அடைவதே இவர்களின் இலக்காகவுள்ளது என்றும் ஜாதிக ஹெல உருமய தெரிவித்தது.

கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அக்கட்சியின் பொதுச் செயலாளரும், பிரதி அமைச்சருமான கருணாரத்ன பரணவிதான மேற்கண்டவாறு கூறினார். அவர் இங்கு மேலும் தெரிவித்தாவது,

கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு யார் பொறுப்பு என இன்னமும் ஒருவரை ஒருவர் கை நீட்டிக்கொண்டுள்ளனர். அடிப்படைவாதத்தை ஒழிக்க ஒரு முறையான பொறிமுறையொன்று வகுக்கப்பட வேண்டும்.

பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள சூழலில் வடமேல் மாகாணத்தின் பல இடங்களிலும், மினுவாங்கொட நகரிலும் வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

கடந்த 21ஆம் திகதிக்குப் பின்னர் அரசாங்கமும், மதத் தலைவர்களும் ஒன்றிணைந்து நாட்டை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தனர்.

 

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Thu, 05/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை