தென்னாபிரிக்க தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி

தென்னாபிரிக்காவில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், வாக்கு எண்ணிக்கை குறைந்தபோதிலும் ஆபிரிக்க தேசிய கொங்கிரஸ் கட்சி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது.

எனினும், அந்த நாட்டின் இடது மற்றும் வலதுசாரிக் கட்சிகளின் பலம் பாராளுமன்றத்தில் அதிகரித்துள்ளது.

கடந்த 1994ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் நெல்சன் மண்டேலா ஆட்சிக்கு வந்ததில் இருந்து, அந்த இரு கட்சிகளின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது இதுவே முதல் முறையாகும்.

தென்னாபிரிக்காவில், கடந்த புதன்கிழமை நடந்து முடிந்த தேர்தலில் ஆபிரிக்க தேசிய கொங்கிரஸ் கட்சிக்கு 58 வீத வாக்குகள் கிடைத்தன. மொத்தமுள்ள 9 மாகாணங்களில் வெஸ்டர்ன் கேப் தவிர அனைத்து மாகாணங்களிலும் தேசிய கொங்கிரஸ் கட்சிக்கு அதிக வாக்குகள் பதிவாகின. எதிர்க்கட்சியான ஜனநாயகக் கூட்டணிக்கு 28 வீத வாக்குகள் கிடைத்தன.

ஆபிரிக்க தேசிய கொங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜூலியஸ் மலேமா ஆரம்பித்த பொருளாதார சுதந்திர போராளிகள் கட்சி, இன்கதா சுதந்திரக் கட்சி, சுதந்திர முன்னணி உள்ளிட்ட சிறு கட்சிகளின் வாக்கு வீதம் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய ஜக்கப் சூமா பதவி விலகியதைத் தொடர்ந்து, புதிய ஜனாதிபதியாக சிரில் ராமபோஸா பதவியேற்றார்.

இதனால், ஆபிரிக்க தேசிய கொங்கிரஸ் கட்சியின் மீது மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளதாக, அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

தென்னாப்பிரிக்க தேர்தலில் விகிதாசார பிரதிநிதித்துவ அடிப்படையில் தேர்தல் நடத்தப்படுகிறது. அதில், நாட்டை வழிநடத்தும் ஒரு கட்சியை வாக்காளர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.

இதுதவிர, 9 மாகாணங்களில் உள்ள சட்டப்பேரவைகளுக்கு உறுப்பினர்களை அவர்கள் தேர்வு செய்கிறார்கள்.

 

Mon, 05/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை