அசாதாரண நிலைமையை கருத்தில் கொண்டு தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு மானியம்

நாட்டின் நிலைமைகளை கருத்திற்கொண்டு மாகாணங்களுக்கிடையிலான சேவை வழங்கும் தனியார் பஸ் உரிமையாளர்கள் செலுத்திவரும் வீதிப்போக்குவரத்து அனுமதிக்கட்டணத்திற்கு மானியம் வழங்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.  

இதன் பிரகாரம் கடந்த மாதம் 21ஆம் திகதி வரை இம் மாதம் 21ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கு இவ்வாறு மானியம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதிக்கான வாகன போக்குவரத்து அனுமதிக் கட்டணத்தில் 50சதவீதத்தை மாத்திரம் தனியார் பஸ் உரிமையாளர்கள் செலுத்தினால் போதுமென போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஜானக மல்லவ ஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.  

மேற்படி காலப்பகுதியில் போக்குவரத்து வருமானம் 20சதவீதத்தால் குறைவடைந்துள்ளதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.  

கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களையடுத்து நாட்டின் இயல்பு நிலை இன்னமும் வழமைக்குத் திரும்பவில்லை.

அத்துடன், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த மக்கள் தொடர்ந்தும் அச்சதுடன் உள்ள சூழலிலேயே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.    

(சுப்பிரமணியம் நிஷாந்தன்) 

Wed, 05/08/2019 - 08:31


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை