வான் பரப்பில் கடும் கண்காணிப்பு; 'ட்ரோன்' பறந்தால் சட்ட நடவடிக்கை

இலங்கை வான் பரப்பில் ட்ரோன் கெமராக்கள் மற்றும் ஆளில்லா விமானங்களை பறக்கவிடுவது தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் அவ்வாறு பறக்கவிடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று விமானப் படைப் பேச்சாளர் குரூப் கெப்டன் கிஹான் செனவிரட்ன தெரிவித்தார்.   

இவ்வாறு பறக்க விடுவது தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளதால் இது தொடர்பில் கண்காணிப்பை மேற்கொள்ளும் பொருட்டு விமானப் படையின் வான் பாதுகாப்பு நடவடிக்கை பிரிவுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.  

உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதலை அடுத்து தேசிய பாதுகாப்பை கருத்திற் கொண்டு சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்திடம் இலங்கை விமானப் படை விடுத்த வேண்டுகோளுக்கமைய ட்ரோன் கெமராக்கள் பயன்படுத்துவதையும் அதன் அனுமதிபத்திரங்களையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முற்றாக தடைசெய்யப்பட்டது. இந்நிலையில், சிலர் தொடர்ந்தும் இதனை சட்டவிரோதமான முறையில் பயன்படுத்துவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில் இது தொடர்பில் விமானப் படை அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றது.   

(ஸாதிக் ஷிஹான்)

Wed, 05/08/2019 - 08:21


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை