எவரெஸ்ட் மலையேற்ற விதிகளை மாற்ற திட்டம்

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் ஏறத் தகுதிபெறுவது குறித்த விதிகளை மாற்றுவது பற்றி யோசிப்பதாக நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முயற்சியின்போது இந்த ஆண்டு 11 பேர் உயிரிழந்தனர். அதிக அளவு நெரிசல் ஏற்பட்டது அதற்குக் காரணமாக இருக்கலாம். எனவே, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கான விதிகளில் மாற்றம் கொண்டு வருவது பற்றி ஆலோசிக்கப்படுகிறது.

பெரும்பாலான மரணங்களைத் தவிர்த்திருக்கலாம் என்றும் மலையேறிப் பழக்கமில்லாதவர்கள் எவரெஸ்ட்டில் ஏறியது அதிக அளவு மரணங்கள் நேர்ந்ததற்குக் காரணம் என்றும் அனுபவசாலிகள் கூறுகின்றனர்.

சீனா வழியாகவும் எவரெஸ்ட் சிகரத்தை அடையலாம். இவ்வாண்டு சீனா வழியே சுமார் 300 பேர் எவரெஸ்ட் சிகரத்தை எட்ட முயன்றனர். அவர்களில் இருவர் உயிரிழந்தனர்.

ஒப்பீட்டளவில் நேபாளம் வழியே சுமார் 800 பேர் சிகரத்தை எட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இவ்வாண்டு நடந்தவற்றை ஆராய்ந்து வருவதாகவும், இனி மலையேற்றத்தில் ஈடுபட விரும்புவோர் அனுபவம், உடல் நலம் ஆகியவற்றுக்கான சான்றுதழ்களைக் கொடுக்க வேண்டும் என்ற விதியை அறிமுகம் செய்வது குறித்துப் பேசிவருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Fri, 05/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை