சீனா மீது புதிய வரிகள் விதிக்க டிரம்ப் எச்சரிக்கை

சீனா மீது புதிய வரிகள் விதிப்பது குறித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் எச்சரிக்கையை அடுத்து சீன மற்றும் ஐரோப்பிய பங்குச் சந்தைகள் வீழ்ச்சி கண்டுள்ளன.

200 பில்லியன் டொலர் சீன பொருட்கள் மீதான வரியை வரும் வெள்ளிக்கிழமை இரட்டிப்புக்கு மேல் அதிகரிக்கப்போவதாகவும், புதிய வரிகளை அறிமுகப்படுத்தப்போவதாகவும் டிரம்ப் ட்விட்டர் மூலம் எச்சரித்துள்ளார்.

இரு தரப்பும் உடன்படிக்கை ஒன்றை நெருங்கி இருப்பதாக அண்மைய கருத்துகள் வெளியாகி இருந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வந்துள்ளது.

டிரம்ப் இவ்வாறு பேசியதால் சீனா அதிர்ச்சி அடைந்ததாகவும் இவ்வாரம் நிகழவிருந்த சீனா மற்றும் அமெரிக்கா வர்த்தகப் பேச்சுவார்த்தைகளிலிருந்து சீனா பின்வாங்கலாம் என்றும் அமெரிக்க ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்நிலையில் நேற்றைய முடிவின்போது சீன மற்றும் ஹொங்கொங் பங்குச் சந்தைகள் 2.9 வீத சரிவை சந்தித்ததோடு ஐரோப்பிய பங்குச் சந்தை ஆரம்ப வர்த்தகத்தில் பின்னடைவை சந்தித்திருந்தது. குறிப்பாக கார், கார் உதிரிப்பாகம் மற்றும் உருக்கு உற்பத்தியாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tue, 05/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை