புருணை: ஒருபாலுறவுக்கான மரண தண்டனை நிறுத்தம்

புருணை மன்னர் ஹசனல் போல்க்கியா, ஒருபால் உறவினர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்திற்கான தற்காலிகத் தடையை நீட்டித்துள்ளார்.

உலகளவில் அந்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு வந்துள்ளதைத் தொடர்ந்து அந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஓரின உறவு, பலாத்காரம் போன்றவற்றுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று கடந்த மாதம் புருணை அறிவித்தது

இஸ்லாமிய ஷரியா சட்டத்தைப் பின்பற்றும் தண்டனைகள் 2014இலிருந்து கட்டங்கட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்துள்ளன. எனினும் ஷரியா சட்டத்தைச் செயல்படுத்துவதில் மரண தண்டனை சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது என்று புருணை சுல்தான் கூறினார்.

கொலை, போதைப்பொருள் கடத்தலுக்கு நடப்பில் உள்ள மரண தண்டனை சுமார் 30 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பாதுகாப்பதே சட்டங்களின் நோக்கம் என்றார் அவர். தனிநபர்களின் அந்தரங்க வாழ்க்கையையும் அவை பாதுகாப்பதாக சுல்தான் ஹசனல் போல்க்கியா கூறினார்.

கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட சட்டங்களை ஐக்கிய நாடுகள் சபை கண்டித்தது.

Tue, 05/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை