கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தால் குறும்படம் வெளியீடு

கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தினால் குறும்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக பொது முகாமையாளர் ஏ.எஸ்.எம். பாயிஸ் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரையின் கீழ், கிழக்கு மாகாணத்தில் காணப்படும் சுற்றுலா தலங்கள் தொடர்பான 17 நிமிடங்களைக்கொண்ட ஆவணப்படம் கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தினால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த குறும்படத்தில் கிழக்கு மாகாணத்தில் காணப்படும் 45 முக்கிய சுற்றுலா பிரதேசங்கள் பதிவு செய்யப்பட்டதுடன் இது சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கிலும், கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா பயணிகளின் வருகையினை அதிகரிக்கும் நோக்கிலும் இது தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை யூ-டியூப் ஊடாக WHERE THE DAY BEGING பார்வையிட முடியும் எனவும் பொது முகாமையாளர் மேலும் குறிப்பிட்டார்.

(ரொட்டவெவ குறூப் நிருபர் அப்துல் சலாம் யாசீம்)  

Wed, 05/08/2019 - 12:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை