இஸ்ரேலில் மற்றொரு தேர்தலுக்கு வாய்ப்பு

இஸ்ரேலில் புதிய அரசு ஒன்றை அமைப்பதில் இழுபறி நீடித்து வரும் நிலையில் அங்கு மீண்டும் பொதுத் தேர்தல் ஒன்றுக்கு செல்லும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வலதுசாரி கூட்டணி நேற்று புதன்கிழமை நல்லிரவுக்கு முன்னர் அவிக்டர் லிபர்மானின் தேசியவாத யிஸ்ராயேல் பெய்ட்னியுவின் ஆதரவை பெறத் தவறும் பட்சத்தில் ஒருசில மாதங்களில் இரண்டாவது தேர்தலுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது.

120 இடங்கள் கொண்ட இஸ்ரேல் பாராளுமன்றத்திற்கு கடந்த ஏப்ரல் 9 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் நெதன்யாகுவின் லிகுட் கட்சி மற்றும் வலதுசாரிகள் மற்றும் மதச்சார்பு கூட்டணி மொத்தம் 60 ஆசனங்களை வென்றது. யிஸ்ராயேல் பெய்ட்னி கட்சியின் ஐந்து ஆசனங்கள் இன்றி நெதன்யாகுவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெற முடியாமலும் புதிய அரசை அமைக்க முடியாமலும் உள்ளது.

Thu, 05/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை