வைரஸ்களுடனான மடிக்கணினி 1.3 மில்லியன் டொலருக்கு ஏலம்

உலகின் மிகமோசமான 6 வைரஸ்கள்் கொண்ட மடிக்கணினி 1.3 மில்லியன் டொலருக்கு ஏலம் மூலம் விலைபோனது.

அந்தக் கறுப்பு நிற சம்சுங் மடிக்கணினி கடந்த செவ்வாயன்று இணையம் வழி ஏலம்விடப்பட்டது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் பழைமையான அந்தக் கணினி 1.3 மில்லியன் டொலருக்கு விலைபோனது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஐ லவ் யூ, சோபிக், மைடூம், டார்டெக்கியுலா, பிளக் எனர்ஜி போன்ற மிக மோசமான வைரஸ்கள் அந்த மடிக்கணினியில் இருந்தன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உலகையே ஆட்டம் காண வைத்த “வொன்னர்கிரை” வைரஸும் அதில் இருந்தது. மடிக்கணினி கலை நயத்தின் அடிப்படையில் விற்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் கூறினர். இந்த மடிக்கணியில் உள்ள வைரஸ்கள் உலகம் முழுவது குறைந்தது 95 பில்லியன் டொலருக்கு பாதிப்பை ஏற்படத்தி இருப்பதாக நம்பப்படுகிறது. மடிக்கணினியை யார் ஏலத்தில் எடுத்தது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.

Thu, 05/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை