நம்பிக்ைகயை கட்டியெழுப்புவதற்கு சர்வமத சபை உருவாக்க வேண்டும்

சர்வமத சமாதான சபை ஒன்றை உருவாக்கி மக்களுக்கிடையில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும்,பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஆலோசனைகளை முன்வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பேராயர் இல்லத்தில் நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

சட்ட மூலம் ஒன்றில் சர்வமத சமாதான சபையை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுப்பது

சிறந்ததாகும். நாட்டின் பொதுவான பிரச்சினைகளுக்கு இந்த சபை மூலம் தீர்வுகளைக் காணமுடியும். பிரதேச மற்றும் மாகாண மட்டத்தில் இது போன்ற சபைகளை உருவாக்குவதற்கு பாராளுமன்றத்தின் மூலம் சட்டமொன்றை கொண்டு வந்து நடவடிக்கை எடுக்க முடியும். அதனையடுத்து சகல கிராம மட்டத்திலும் இத்தகைய சபைகளை உருவாக்கி மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தையும் நட்புறவையும் கட்டியெழுப்ப முடியும்.

இத்தகைய சபைகள் மூலமே மக்களுக்கிடையில் நம்பிக்கையை கட்டியெழுப்ப முடியும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். அத்தகைய சபைகளை உருவாக்கி கிராம மட்டத்திலும் மாகாண மட்டத்திலும் கூட்டங்களை நடத்தி மக்களின் பொதுப் பிரச்சினைகளை அதன் மூலம் தீர்த்துக்கொள்ள முடியும்.

இதற்கிணங்க நிரந்தரமான வேலைத்திட்டமாக இதனை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்தவர்கள் இறைவன் மீதான விசுவாசத்தையும் கௌரவத்தையும் பாதுகாத்து தமது வீடுகளிலிருந்து அமைதியை பாதுகாப்பதற்காக தினமும் செபமாலை பிரார்த்தனைகளை மேற்கொள்ளுமாறும் பேராயர் கேட்டுக் கொண்டுள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 05/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை