சிறையில் தண்ணீர் மறுக்கப்பட்டு உயிரிழந்தவருக்காக இழப்பீடு

சிறையில் தண்ணீர் கொடுக்கப்படாததால் வறட்சியால் உயிரிழந்த ஆடவரின் குடும்பத்தினர் 6.75 மில்லியன் டொலர் இழப்பீடு பெறவுள்ளனர்.

ஆடவர் இருந்த மிலாவாக்கி சிறை மற்றும் அதிலிருக்கும் கைதிகளின் பராமரிப்புக்குப் பொறுப்பான தனியார் நிறுவனம் அந்தத் தொகையைச் செலுத்தவுள்ளது.

சூதாட்டக் கூடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்காக 2016இல் 38 வயது டெர்ரில் தோமஸ் கைது செய்யப்பட்டார். அப்போது அவர் செய்த தவறுகளுக்காக தோமஸ் தனிமைப்படுத்தப்பட்டார். அங்கு அவருக்கு உணவு, கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டன. அவரைத் தண்டிக்கும் நோக்கத்தில் அங்கிருந்த தண்ணீர்க் குழாயும் மூடப்பட்டது.

7 நாட்களுக்குப் பின்னர் தோமஸ் தம் அறையில் மாண்டு கிடக்கக் காணப்பட்டார். அவருடைய மரணம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் சிறை ஊழியர்கள் மூவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

Fri, 05/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை