இங்கிலாந்து 104 ஓட்டங்களால் வெற்றி

ஆட்ட நாயகன் பென் ஸ்ரோக்ஸ்

12 ஆவது உலக கிண்ண போட்டியில் தென்னாபிரிக்க அணியுடனான முதலாவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 104 ஓட்டங்களினால் அபார வெற்றியீட்டியது.

312 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என பதிலெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 39 .5 ஓவர்கள் முடிவில் 207 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.

தென்னாபிரிக்க அணி சார்பாக குயின்டன் டி கொக் மற்றும் ஹசீம் அம்லா இருவரும் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர்.நன்றாக ஆடிக் கொண்டிருந்த அம்லா ஆர்ச்சர் வீசிய பந்து தலைக்கவசத்தில் பட்டதால் அதனால் நிலை குலைந்த அவர் பெவிலியன் திருப்பினார்.கொக்குடன் ஆடுகளம் புகுந்தார் மார்கிறாம் இருவரும் நிதானமான ஆடிய நிலையில் ஆர்ச்சரின் பந்தில் ரூட்டிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

அவர் 11 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றார்.பின்னர் அணியின் தலைவர் பிளஸிஸ் 5 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க இங்கிலாந்து அணியின் பக்கம் வெற்றி திசை திரும்பியது.தென்னாபிரிக்க அணிக்கு பெரும் இக்கட்டான நிலையில் ஆரம்ப வீரருடன் இணைந்தார் வென்டர்சன் அவர்கள் இருவரும் தென்னாபிரிக்க அணிக்கு நம்பிக்கை தரும் விதம் ஆடினாலும் கொக் 68 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து செல்ல மீண்டும் தென்னாபிரிக்க அணியின் வெற்றிக்கனவு தவிடு பொடியானது.

 பின்னர் வென்டர்சன் 50 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க காயம் காரணமாக பெவிலியன் சென்ற அம்லா ஆடுகளம் புகுந்தார். ஆனால் அவரால் இங்கிலாந்து பந்துவீச்சை சமாளித்து ஆட முடியாத நிலையில் வெறும் 13 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க தென்னாபிரிக்க அணியின் வெற்றிக்கனவு பறி போனது.பெஹல்வாயோ 24 ஓட்டடங்களுக்கும் நிக்கிடி ஆறு ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க தென்னாபிரிக்க அணி ஈற்றில் தோல்வியை தழுவியது.

பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக ஆர்ச்சர் 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டையும் புளுங்கனட் இரண்டு விக்கெட்டையும் ரஷீட்,அலி தலா ஒரு விக்கெட்டை பதம் பார்த்தனர்.

லண்டனிலுள்ள கென்னிங்டன் விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை 3 மணியளவில் (இலங்கை நேரப்படி) ஆரம்பமாகிய இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 312 ஓட்டங்களை தென்னாபிரிக்கா அணியின் வெற்றியிலக்காக நிர்ணயித்தது.

இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது. அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 311 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இங்கிலாநது அணிசார்பாக, அதிரடியாக துடுப்பெடுத்தாடிய பென் ஸ்ரோக்ஸ் 79 பந்துகளில் 89 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

அத்துடன், இயன் மோர்கன் 57 ஓட்டங்களையும், ஜெஸன் ராய் 54 ஓட்டங்களையும், ஜோ ரூட் 51 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

தென்னாபிரிக்கா அணி சார்பில் பந்துவீச்சில், லுங்கி நெகிடி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, இம்ரான் தாஹீர் மற்றும் ரபாடா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு அன்டில் பெஹ்லுவாயோ ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக இங்கிலாந்து அணியின் பென் ஸ்ரோக்ஸ் தெரிவானார்.

உலக கிண்ண போட்டியின் இரண்டாவது போட்டி இன்று மேற்கிந்திய தீவு -பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் டரன்டன் பிரிஜ் மைதானத்தில் மாலை 3 மணிக்கு இடம்பெறும்.

Fri, 05/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை