பங்களாதேஷ் சூறாவளி: ஆயிரம் வீடுகள் சேதம்

வட இந்தியாவை தாக்கி பலமிழந்த நிலையில் பங்களாதேஷுக்குள் நுழைந்த பானி சூறாவளி, அங்கு மோசமான சோதங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பங்களாதேஷில் 1,000க்கும் அதிகமான வீடுகள் சேதமாகி இருப்பதோடு ஒட்டுமொத்த கிராமங்களும் நீரில் மூழ்கியுள்ளன. குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்து மேலும் 63 பேர் காயமடைந்துள்ளனர்.

பாதுகாப்பிற்காக ஒரு மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது பாரிய ஆபத்துச் சூழல் முடிந்து விட்டதாக பங்களாதேஷ் வளிமண்டலவியல் திணைக்கள பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

வட கிழக்கு இந்தியாவில் இருந்து கடந்த சனிக்கிழமை பங்களாதேஷை தாக்கிய இந்த சூறாவளியின் பலம் குறைந்தபோதும், கரையோரங்களில் இருக்கும் பல டஜன் கிராமங்களையும் மூழ்கடித்துள்ளது.

மணிக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் வீசிய இந்த சூறாவளியால் நோகாலி மாவட்டத்தில் பல வீடுகள் சேதமடைந்துள்ளன.

Mon, 05/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை