நாஜிக்களால் கொல்லப்பட்ட கைதிகளின் திசுக்கள் அடக்கம்

நாஜி கால பெர்லினில் கொல்லப்பட்ட சிறை கைதிகளின் 300க்கும் அதிகமான சிறிய மனித திசுக்கள் நேற்றுப் புதைக்கப்பட்டன.

இந்த சிறு மாதிரிகள் சரிட் பல்கலைக்கழக மருத்துவமனையின் உடற்கூறியல் பேராசிரியர் ஹார்மன் ஸ்டீவன் உடையதாக இருந்துள்ளன. 1952 ஆம் ஆண்டு சேகரித்த இந்த மாதிரிகள் அவரது வரிசுகளால் 2016 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

ஹிட்லரின் ஆட்சியை எதிர்த்த அரசியல் கைதிகளை கொலை செய்த பின், அவர்களது உடல்களை பெற்று திசுக்களை சேகரிக்கும் பணியை ஸ்டீவ் நாஜிக்களுடன் சேர்ந்த திட்டமிட்டு செய்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அவ்வாறு கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்றும் தெரியவந்துள்ளது.

சுமார் ஒரு மில்லி மீற்றர் நீளமே உள்ள அந்த திசுக்களை சேகரித்த ஸ்டீவ் அவற்றை சிறிய கறுப்பு நிற பெட்டிகளில் அவர்களது பெயர்களுடன் சேகரித்து வைத்திருந்தார்.

ஹிட்லர் ஆட்சிக்கு வந்த பின் பெர்லின் – பிளொட்சென்சி சிறையில் சுமார் 3,000 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

Tue, 05/14/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக