தமிழக இடைத்தேர்தல்; ஆட்சியை தக்கவைத்தது எடப்பாடி அரசு

தி.மு.க-13; அ.தி.மு.க-09

தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து 22 தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க 13 இடங்களை கைப்பற்றியுள்ளது. அதேநேரம் அ.தி.மு.க. 09 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைதக்க வைத்துள்ளது

தமிழகத்தில் மக்களவை தேர்தலோடு காலியாக உள்ள 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை தீர்மானிக்கும் தேர்தலாக இது பார்க்கப்பட்டது. சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக 13இடங்களிலும், அதிமுக 09 இடங்களிலும் வெற்றி முகம் கண்டது.

திமுக வெற்றியீட்டிய தொகுதிகள்,

திருப்போரூர், தஞ்சாவூர், பெரம்பூர், ஆம்பூர், திருவாரூர், ஒட்டப்பிடாரம், குடியாத்தம், அரவக்குறிச்சி, பெரியகுளம், பரமக்குடி, திருப்பரங்குன்றம், பூவிருந்தவல்லி ஆகிய 12 சட்டமன்ற தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

அதிமுக வெற்றிபெற்றுள்ள தொகுதிகள்,

மானாமதுரை, சாத்தூர், விளாத்திகுளம், நிலக்கோட்டை, சூலூர், சோளிங்கர், ஆண்டிப்பட்டி, பாப்பிராட்டிபட்டி, ஒசூர், அரூர் ஆகிய தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள்.

இந்த நிலையில் தமிழக சட்டசபையில் மொத்த 234 சட்டமன்ற உறுப்பினர்களின் அதிமுக (அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் அடங்குவார்கள்). காரணம், தற்போது அ.தி.மு.க வசமுள்ள 115 உறுப்பினர்களில் விருதாச்சலம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன், அறந்தாங்கி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ரத்தின சபாபதி, கள்ளக்குறிச்சி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பிரபு ஆகியோர் வெளிப்படையாகவே டிடிவி தினகரன் ஆதரவு மனநிலையில் உள்ளனர்.

டி.டி.வி தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்ய சபாநாயகருக்கு அதிமுக கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்திருக்கிறார்.

தமிழக சட்டப்பேரவையின் பலம் 214 ஆக உள்ளது. இதன்படி பார்த்தால் ஆட்சியமைக்க தேவையான சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 108. அதிமுக-109, திமுக-காங்கிரஸ்-97, சபாநாயகர்-1, டிடிவி-1, தோழமை கட்சிகள்-3, இதர-3. ஆகவே இந்த தேர்தலில் மூலம் அ தி.மு.இ. 10 இடங்களில் வெற்றி பெற்றதன் மூலம் ஆட்சியை தக்கவைத்துள்ளது. இதன் அ.தி.மு.க. அரசு இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு ஆட்சியைதொடரும் என்பது உறுதியாகி விட்டது.

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது

Fri, 05/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை