கோத்தா உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கு ஜூன் 19 விசாரணை

மெதமுலன டி.ஏ. ராஜபக்‌ஷ நூதனசாலை மற்றும் ஞாபகார்த்த தூபி நிர்மாணத்தில் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஜூன் 19 ஆம் திகதி முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

குறித்த வழக்கு இன்றைய தினம் (23), மூரடங்கிய விசேட மேல் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது இவ்வுத்தரவு வழங்கப்பட்டது.

அதற்கமைய, இவ்வழக்கின் சாட்சியாளர்கள் நால்வரையும் அன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு, நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

இதேவேளை, தனது மருத்துவ சிகிச்சைக்காக நாளைய தினம் (24) சிங்கப்பூர் செல்வதற்கு கோத்தாபய ராஜபக்ஷவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. எதிர்வரும் ஜூன் 02ஆம் திகதி வரை அவருக்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கியுள்ளது.

மெதமுலன டி.ஏ. ராஜபக்‌ஷ நூதனசாலை நிர்மாணத்தில் ரூபா 33.9மில்லியன் (ரூ. 3.39கோடி) நிதி, முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக, சட்ட மா அதிபரினால், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக விசேட மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Thu, 05/23/2019 - 11:35


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை