கடின மனதைத் தளர்த்தி இறைவனின் விருப்பத்துக்கு தலைவணங்குவோம்

குரோதத்தால் கடினமான மனதைத் தளர்த்தி சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்கான இறைவனின் விருப்பத்துக்கு தலைவணங்க பிரார்த்திப்பதாக பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் தெரிவித்தார்.

செய்ததுடன் கத்தோலிக்க மக்கள் வீடுகளிலிருந்தவாறே திருப்பலிப்பூஜையில் பங்கேற்றனர்.

இதேவேளை, குண்டுத் தாக்குதலுக்குள்ளான கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய பகுதி பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டிருந்த போதும் ஆலயத்திற்கு முன்னால் மக்கள் மெழுகுதிரிகளை ஏற்றி பிரார்த்தனையில் ஈடுபட்டதைக் காணமுடிந்தது.

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தமது திருப்பலி மறையுரையில் நற்செய்தி வாசகத்திலிருந்து ஒருபகுதியை எடுத்து அதனை தெளிவுபடுத்தினார்.

அவரது சீடரான மீனவர்கள் வலைகளை போடுமிடத்துக்கு செல்லுமவர் அவர் கூறும் இடத்தில் வலைகளைப் போடுமாறு பணிக்கின்றார். எனினும் இரவிரவாக அந்த சீடர்கள் அப்பகுதியில் வலைகளைப் போட்டும் எந்த மீன்பாடும் கிடைக்காத நிலையில் யேசு கிறிஸ்து கூறியதற்காக அவ்விடத்தில் வலைகளைப் போடுகின்றனர்.

ஆச்சரியப்படும் வகையில் அவர்கள் எதிர்பாராதவிதமாக வலைகள் கிளியுமளவிற்கு பெருமளவு மீன்கள் கிடைக்கின்றன என கர்தினால் தெரிவித்தார்.

இந்த நிகழ்வானது இறைவனின் வார்த்தைகளை நம்பியவர்களை அவர் ஒருபோதும் கைவிடுவதில்லை. அவர்களுடைய எதிர்பார்ப்பு நிச்சயம் நிறைவேறும் என்பதையே காட்டுகிறது.

இறைவனை மறந்து வாழும் சில குழுக்களே குண்டுகளைக் கட்டிக்கொண்டு ஆண்டவரின் பெயரால் அதனைச் செய்கிறோமென்று வெடிக்க வைக்கின்றனர். அதனால் அப்பாவி மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டன. (ஸ)

 

Mon, 05/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை