வாகன சாரதிகளுக்கு 2 வார சலுகைக்காலம்

நகரங்களில் வீதி ஒழுங்கை கடைப்பிடிக்க கடும் சட்டம்

கொழும்பு உட்பட முக்கிய நகரங்களில் நடைமுறையிலுள்ள 'வீதி ஒழுங்கை சட்டம்' இரண்டு வாரங்களில் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுமென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர அறிவித்துள்ளார்.

இச்சட்டத்தை வாகன சாரதிகள் பின்பற்றுவதற்கு இரண்டுவாரகால சலுகைக்காலம் வழங்கப்பட இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து விளக்கமளிக்கும் ஊடகச்சந்திப்பு நேற்று பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வீதி ஒழுங்கை சட்டம் நடைமுறைப்படுத்துவதால் வீதியொழுங்கு கடைப்பிடிக்கப்படுமென்பதுடன், வாகன நெறிசலும் குறைவடையும். அத்துடன்

விபத்துகளும் கணிசமாக குறைவடையும்.

நாட்டின் பிரதான நகரங்களில் வீதி ஒழுங்கை சட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது. சட்டத்தை பின்பற்ற இரண்டுவாரம் சலுகைக் காலமாக வழங்கப்படவுள்ளது. நாளை(இன்று) முதல் இந்தச் சலுகைக்காலம் நடைமுறைக்கு வரவுள்ளது.

கனரக வாகனங்கள் முதல் அனைத்து வானங்களும் இரண்டு வாரகாலத்தில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒத்துழைப்புகளை வழங்க வேண்டுமென்பதுடன், அதன் பிரதிபலனையும் பெற்றுக்கொள்ள வேண்டும். சலுகைக்காலம் முடிவடைந்தப் பின்னர் மிகக் கடுமையாக வீதி ஒழுங்கை சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளோம்.

சிவில் உடையிலான பொலிஸாரைக் கொண்டு இதனைக் கண்காணிக்கவுள்ளதுடன் வீடியோக்கள் மூலமும் கண்காணிக்க தீர்மானித்துள்ளோம்.

ஆகவே, நாளை (இன்று) முதல் இரண்டு வாரகாலத்துக்கு வீதி ஒழுங்கை சட்டத்தை நடைமுறைப்படுத்த வழங்கப்பட்டுள்ள சலுகைக் காலத்தில் கூடிய பிரதிபலனைப் பெற்றுக்கொள்ளுமாறு சாரதிகளிடம் கேட்டுக்கொள்கின்றோம் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Mon, 05/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை