ஆளுநர் ஹிஸ்புல்லாஹ், அமைச்சர் ரிஷாட்டுக்கு எதிராக முறைப்பாடுகள்

கைத்தொழில் வாணிப அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கு எதிராக பொலிஸ் தலைமையத்தில் இரண்டு முறைபாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

பௌத்த மதத்தலைவர்கள் இருவரால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளும் பொருட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் நேற்று மாலை இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் விளக்கமளிக்கையில் :-

இதேவேளை, கைத்தொழில் வணிகத்துறை, நீண்டகாலமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள்குடியேற்றம், கூட்டுறவுத்துறை அபிவிருத்தித்துறை, தொழிற்பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சரும்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கும் எதிராக பொலிஸ் தலைமையகத்தில் இரண்டு முறைபாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வண. இப்பேகந்த சத்தாதிஸ்ஸ தேரினால் அமைச்சர் ரிஷாட் பதியுத்தீனுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக வண. அங்குனுகலலே ஸ்ரீ ஜினானந்த தேரரினாலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்படி முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளும் பொருட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஸாதிக் ஷிஹான்

Mon, 05/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை