மனிதன் - யானை மோதல் 25 மனிதர்கள், 72 யானைகள் பலி

வடமேல் வன ஜீவராசிகள் வலயத்தில் கடந்த சில வருடங்களாக யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகி 25 பேர் உயிரிழந்துள்ளதுடன் 72 யானைகள் கொல்லப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் வடமேல் வன ஜீவராசிகள் வலய உதவிப் பணிப்பாளர் டப்ளிவு. ஏ. சரத் தெரிவித்தார்.

கடந்த நான்கு மாதகாலப்பகுதிக்குள் 14 யானைகள் கொல்லப்பட்டுள்ளதுடன் யானைகளின் தாக்குதல்களுக்குள்ளாகி 8பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த வருடம் யானைகளின் தாக்குதல்களுக்கு இலக்காகி 17 பேர் உயிரிழந்துள்ளதுடன் 58யானைகள் மனிதர்களால் கொல்லப்பட்டுள்ளன.

இவ்வருடத்தில் அதிகமான யானைகள் கெபிதிகொள்ளாவ பகுதியிலேயே கொல்லப்பட்டுள்ளன. இது தவிர தலாவ, கெக்கிராவ, நொச்சியாகம, கஹட்டகஸ்திகிலிய, தம்புத்தேகம ஆகிய பகுதிகளிலும் யானைகளுக்கும் மனிதர்களுக்குமிடையிலான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அனைத்து வயல் நிலங்களும் பயிர்ச்செய்கைகளுக்குட்படுத்தப்படல், காடுகள் அழிக்கப்படல், நீர்ப்பற்றாக்குறை என்பனவே யானைகள் குடியிருப்புக்களை நோக்கி வருவதற்கான பிரதான காரணங்களாகும். யானைகளின் தாக்குதலுக்குள்ளாகி மரணிப்பவர்களுக்கு தலா ஐந்து(5) இலட்சம் ரூபா வீதம் அரசாங்கத்தினால் நட்டஈடு வழங்கப்படுவதாகவும் ஜீவராசிகள் வலய உதவிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

மதவாச்சி தினகரன் நிருபர்

Tue, 05/28/2019 - 09:36


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை