தரம் - 01இற்கு மாணவர் அனுமதி விண்ணப்பம்

இன்றைய தினகரனுடன் இணைப்பு

அரசாங்கப் பாடசாலைகளில் 2020ஆம் ஆண்டில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான அறிவுறுத்தல்களுடன் கூடிய விண்ணப்பப் படிவம் இன்று பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன.  

இதற்கமைய அனைத்து விண்ணப்பதாரிகளும் ஆகக்குறைந்தது மூன்று மாகாண பாடசாலைகள் உள்ளிட்ட 06பாடசாலைகளுக்காக விண்ணப்பித்திருக்க வேண்டியது கட்டாயமென கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.  

தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளையும் கொண்ட பாடசாலைகளின் இருமொழி மூலத்திற்கும் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இரண்டு மொழிமூலங்களுக்கும் வெவ்வேறாக விண்ணப்பிக்க வேண்டும்என்றும் கூறப்பட்டுள்ளது.  

மேலும் பாடசாலைக்கு அண்மையில் வசிப்போர், பழைய மாணவர்களாகவுள்ள பெற்றோரின் பிள்ளைகள், அதே பாடசாலையில் கற்கும் சகோதர, சகோதரிகள், அரச சேவைத் தேவையின் பொருட்டு இடமாற்றம் பெற்ற அரச, கூட்டுத்தாபன, நியதிச் சட்டசபை மற்றும் அரச வங்கி அலுவலகர்கள் ஆகியோரின் பிள்ளைகள் என்பவர்களுக்கு புள்ளிகள் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும்.   சட்டவிரோத ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படின் அவர்கள் நேர்முகப் பரீட்சையில் நிராகரிக்கப்படுவர்.

வகுப்பொன்றிற்கு இருக்க வேண்டிய மாணவர்களின் உச்ச எண்ணிக்கை 36 என்றும் இதில் 05 மாணவர்கள் முப்படைகள் மற்றும் பொலிஸாரின் பிள்ளைகளாக இருப்பரென்றும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது. 

(லக்ஷ்மி பரசுராமன்)  

Tue, 05/28/2019 - 09:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை