நியூசிலாந்து கருவூல இணையத்தளம் 2 நாட்களில் 2000 முறை ஊடுருவல்

நியூசிலாந்துக் கருவூலத்தின் இணையத்தளம் இரண்டு நாட்களில் ஈராயிரத்துக்கும் அதிகமான முறை ஊடுருவப்பட்டதாகக் கருவூலத் தலைவர் கேப்ரியல் மெர்க்லூப் தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தின் தகவல்களைத் தேடும் முயற்சியில் ஊடுருவல்காரர்கள் ஈடுபட்டதாகத் தெரியவந்துள்ளது.

நியூசிலந்து எதிர்க்கட்சியினர் அந்நாட்டின் பொருளாதாரத் திட்டம் குறித்த தகவல்களைக் கசிய விட்ட மறுநாள் இணையத்தள ஊடுருவல் குறித்த செய்தி வெளிவந்துள்ளது.

எங்கிருந்து இணையத்தள ஊடுருவல் மேற்கொள்ளப்பட்டது என்பது பற்றி மெர்க்லூப் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.

நியூசிலாந்தில் இன்று வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அது பற்றிய தகவல் கசிந்துள்ளது அதிக சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இணையத்தள ஊடுருவல் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வரவு செலவுத் திட்டம் தொடர்பான அணுகுமுறை சீரமைக்கப்படும் என்று நியூசிலாந்துப் பிரதமர் ஜசிண்டா ஆர்டன் உறுதியளித்துள்ளார்.

Thu, 05/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை