நியூசி. பள்ளிவாசல் தாக்குதல்: செனட்டர் மீது முட்டை வீசிய ஆஸி. இளைஞன் நன்கொடை

அவுஸ்திரேலிய செனட்டரின் தலையில் முட்டையை உடைத்துப் பிரபலமான இளைஞன் நியூசிலாந்துப் பள்ளிவாசல் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 70,000 டொலர் நன்கொடை அளித்துள்ளார்.

17 வயதான வில் கொனொல்லி பள்ளிவாசல் தாக்குதல் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்ட அவுஸ்திரேலிய செனட்டர் ப்ரேஸர் அன்னிங் மீது முட்டையை உடைத்தார்.

அவரைக் கைது செய்த பொலிஸார், பின்னர் அவர் மீது குற்றம் ஏதும் சுமத்தாமல் விடுவித்தனர். அந்தக் காலக்கட்டத்தில் இளைஞர் எதிர்நோக்கக் கூடிய உத்தேச வழக்கைச் சமாளிப்பதற்காக இணையத்தில் நிதி திரட்டப்பட்டது. அதில் கிட்டத்தட்ட 70,000 டொலர் நிதி சேர்ந்தது. அந்த தொகை இனி தனக்குத் தேவைப்படாது என்பதால் பள்ளிவாசல் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்தத் தொகையை நன்கொடையாகக் கொடுப்பதாய் கொனொல்லி கூறினார். “அவலத்திற்கு முகம்கொடுத்தவர்களுக்கு இது சற்று நிவாரணத்தை தரும் என்று நான் முழு மனதுடன் எதிர்பார்க்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டார்.

Thu, 05/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை