பிளாஸ்டிக் கழிவுகளை திருப்பி அனுப்புவதற்கு மலேசியா முடிவு

மலேசியாவிலிருந்து 450 தொன் பிளாஸ்டிக் கழிவுகள் திருப்பி அனுப்பப்படும் என்று அந்நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சர் இயோ பீ யின் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, கனடா, ஜப்பான், அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து அந்த பிளாஸ்டிக் கழிவுகள் மலேசியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்தவர்களை, ‘துரோகிகள்’ என்று அவர் வருணித்துள்ளார்.

வளர்ந்த நாடுகள் அவற்றின் கழிவுகளைக் கொட்டும் இடமாக மலேசியாவைப் பயன்படுத்துவதை எதிர்த்துப் போராடப் போவதாக இயோ கூறினார்.

மலேசியாவும், பிற வளரும் நாடுகளும் சட்டவிரோத பிளாஸ்டிக் கடத்தலுக்குரிய புதிய இலக்குகளாக அமைந்துள்ளன என்றார் அவர்.

நாடு முழுவதும் உள்ள பத்துக்கும் மேற்பட்ட சட்டவிரோத பிளாஸ்டிக் மறுபயனீட்டுக் கூடங்களை அரசாங்கம் முடக்கி விட்டதாக இயோ குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு ஜூலையிலிருந்து இதுவரை 150க்கும் அதிகமான பிளாஸ்டிக் மறுபயனீட்டுக் கூடங்கள் மூடப்பட்டு விட்டதாக அவர் விளக்கினார்.

Thu, 05/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை