10 ஆண்டுகளாக உணர்வற்றவரின் கருணைக் கொலையில் இழுபறி

பிரான்ஸில் கருணைக் கொலை தொடர்பிலான விவாதத்தில் மையமாக இருந்த ஒருவருக்கு கடந்த ஒரு தசாப்தமாக அளிக்கப்பட்ட சிகிச்சைகள் இந்த வாரம் நிறுத்தப்படவுள்ளது.

2008 ஆம் ஆண்டு மோட்டார் சைக்கிள் விபத்தொன்றுக்கு முகம்கொடுத்தது தொடக்கம் 42 வயதான வின்சன்ட் லம்பர்ட் என்பவர் உணர்வற்ற நிலையில் இருந்து வருகிறார்.

அவருக்கு வழங்கப்படும் மருத்துவ பராமரிப்புக் குறித்து அவரது குடும்பத்திற்குள் முரணான கருத்து நிலவுகிறது. அவருக்கான சிகிச்சைகளை அகற்றிக்கொள்ள மனைவி விரும்புவதோடு அவரது உயிர்காப்பு கருவிகள் தொடர்ந்து பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்று பெற்றோர் வலியுறுத்துகின்றனர்.

இந்த விவகாரம் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் வரை சென்றது.

இதில் அவரது உயிர்பாதுகாப்பு கருவிகளை அகற்ற அனுமதிக்கு பிரான்ஸ் நிதிமன்றத்தின் தீர்ப்பை ஐரோப்பிய நீதிமன்றம் உறுதி செய்தது.

எனினும், வின்சென்ட் லாம்பெர்ட்டின் தந்தை அவர் கடத்திச் செல்லப்படலாம் என்று தெரிவித்த அச்சத்தின் காரணமாக அவரை கருணை கொலை செய்ய அனுமதிக்கும் முயற்சியை மருத்துவர்கள் நிறைவேற்றவில்லை.

இந்நிலையில், தற்போது ஒரு புதிய மருத்துவ குழு கருணை கொலை தொடர்பாக மேலும் சில முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது. அவரை கருணை கொலை செய்யக்கூடாது என்று முன்னர் செய்யப்பட்ட சில முறையீடுகள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது இது குறித்த எதிர்பார்ப்புகள் மற்றும் விவாதங்கள் அதிகரித்துள்ளன.

Tue, 05/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை