அமெரிக்காவுடனான போர் டிரம்ப் கடும் எச்சரிக்கை

ஈரானின் அழிவாக இருக்கும்

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் மோதல் வெடித்தால் அது ஈரானின் அழிவாக இருக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

“ஈரான் போரை விரும்பினால் அது ஈரானின் உத்தியோகபூர்வ முடிவாக இருக்கும்” என்று டிரம்ப் தனது ட்விட்டரில் கடந்த சனிக்கிழமை குறிப்பிட்டார். “அமெரிக்காவை மீண்டும் ஒருபோதும் எச்சரிக்க வேண்டாம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா அண்மைய தினங்களில் வளைகுடா பிராந்தியத்தில் மேலதிக போர் கப்பல்கள் மற்றும் விமானங்களை நிறுத்தியுள்ளது.

இரு தரப்புக்கும் இடையிலான மோதலைத் தணிக்க அண்மையில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் அமெரிக்க ஜனாதிபதியின் மிரட்டல் அதற்கு முரணாக உள்ளது.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான சர்ச்சை பெரும் பூசலாக உருவெடுக்க விரும்பவில்லை என்று சில நாட்களுக்கு முன்பாக, அவர் கூறியிருந்தார்.

ஈரானும் அண்மைக் காலத்தில் போர் பதற்றத்தை தணிக்கும் வகையிலேயே கருத்துக் கூறி இருந்தது. போருக்கான பசி இல்லை என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் கடந்த சனிக்கிழமை குறிப்பிட்டிருந்தார். அமெரிக்கா–ஈரான் மோதல் போக்கு காரணமாக சர்வதேச சந்தையில் கடந்த ஒரு மாதத்தில் மசகு எண்ணெய் விலை 10 வீதம் அதிகரித்துள்ளது.

 

Tue, 05/21/2019 - 05:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை