தரம் 1 - 6 வரையான மாணவர்களுக்கு மே 13 இல் பாடசாலை

RSM
தரம் 1 - 6 வரையான மாணவர்களுக்கு மே 13 இல் பாடசாலை-Schools, 2nd Term, Primary Section, Secondary Section, Security Arrangements

மே 06 இல் தரம் 6 - 13 வரையான மாணவர்களுக்கு பாடசாலை ஆரம்பம்

எதிர்வரும் மே 6 ஆம் திகதி திங்கட்கிழமை, தரம் 6 முதல் தரம்13 வரையான மாணவர்களுக்கு மாத்திரம், இரண்டாம் தவணைக்காக பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உச்ச அளவில் உறுதிப்படுத்தும் நோக்கில், அரசாங்கத்தினால் விசேட பாதுகாப்பு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய, குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த பாதுகாப்பு திட்டத்தின் கீழ், தரம் 01 முதல் தரம் 05 வரையான மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள், எதிர்வரும் மே 13 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாளைய தினம் (05) கொழும்பிலுள்ள பாடசாலைகள் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகள் சோதனையிடப்படவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் நாளை பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் பாடசாலைகளை அண்டிய பகுதிகளில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என அவர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sat, 05/04/2019 - 20:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை