பாடசாலைகளில் நாளை விசேட சோதனை

பி.ப. 1.00மணிக்கு பின்னர் வாகனம் நிறுத்த வேண்டாம்

கொழும்பிலுள்ள பாடசாலைகளில் நாளையதினம் (05)  விசேட சோதனை நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதற்கமைய, நாளை பிற்பகல் 1.00மணியின் பின்னர் பாடசாலைகளுக்கு அருகில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் எனவும், அவர் அறிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் வாகனங்களை நிறுத்துவதற்கான இடம் மற்றும் விளையாட்டு மைதானம் தொடர்பாக திட்டம் வகுப்பட்டுள்ளது எனத் தெரிவித்த அவர், அது தொடர்பான விடயங்கள் ஊடகங்கள் மூலம் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

பாடசாலைகளின் பாதுகாப்புத் தொடர்பில் முப்படையினரின் உதவியுடன் பொலிஸார் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் தலைமையகத்தினால், விசேட ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், ருவன் குணசேகர தெரிவித்தார்.

மேலும், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதோடு, அது தொடர்பில் குறித்த பிரிவுக்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் உரிய பிரதி பொலிஸ் மா அதிபர்களிடம் கண்காணிப்பு பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டினார்.

Sat, 05/04/2019 - 17:03


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை