கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கான நேர்முகப் பரீட்சை மீண்டும் ஒத்திவைப்பு

கிழக்கு மாகாணத் தொண்டர் ஆசிரியர்களுக்கான நேர்முகப் பரீட்சை மீண்டும் பிற்போடப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின்; செயலாளர் ஐ.கே.ஜி.முத்துபண்டா  தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் அரசாங்கப் பாடசாலைகளில் தொண்டர் ஆசிரியர்களாக சேவையாற்றியவர்களை, இலங்கை ஆசிரியர் சேவை 3ஆம் வகுப்பின் 11ஆம் தரத்திற்கு இணைத்துக்கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை கடந்த  25ஆம்,  26ஆம் திகதிகளில் நடைபெறவிருந்தது.

தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை  காரணமாக  இத்திகதிகளில்  மாற்றம் செய்யப்பட்டு, ஏப்ரல் 25ஆம் 26ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த நேர்முகப் பரீட்சை, மே 3ஆம், 4ஆம் திகதிகளுக்கு பிற்போடப்பட்டிருந்தன.

இதற்கமைய, ஏப்ரல் 25ஆம் திகதி நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டவர்களுக்கு மே 3ஆம் திகதியும், ஏப்ரல்  26ஆம் திகதி நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டவர்களுக்கு மே 4ஆம் திகதியும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், கிழக்கு மாகாணத்தில் நிலைமை வழமைக்கு திரும்பாத காரணத்தினால், மறு அறிவித்தல்வரை தொண்டர் ஆசிரியர்களுக்கான நேர்முகப் பரீட்சை மீண்டும் பிற்போடப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

(அஷ்ரப்கான் -கல்முனை மத்திய தினகரன் நிருபர், கியாஸ் -கிண்ணியா மத்திய  நிருபர், எம்.எஸ்.எம்.ஹனீபா -ஒலுவில் விசேட நிருபர்)

Tue, 04/30/2019 - 10:21


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை