குண்டுத்தாக்குதல் இழப்புகளுக்கு 5 மில்லியன் ரூபாய் வரை நட்டஈடு

அமைச்சரவை அங்கீகாரம்  

தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சான்றிதழுக்கு அமைவாக உச்ச மட்ட அளவாக ரூபா 5 இலட்சம் ரூபாவும் சொத்துக்கள் அல்லது ஆதனங்கள் இழப்பு தொடர்பாக அரச மதிப்பீட்டாளரின் மதிப்பீட்டு அறிக்கைக்கு அமைவாக உச்சமட்டக் கொடுப்பனவாக 5 மில்லியனும், இறந்தவர்களுக்கு 1 மில்லியன் ரூபாவும் வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  

தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்காக தேசிய கொள்கைகள் பொருளாதார அலுவல்கள், மீள் குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சால் வழங்கப்பட்ட  அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்தார்.  

அத்துடன் பாதிக்கப்பட்ட மதஸ்தலங்களை அரசாங்கத்தினால் புனரமைப்பதற்கு அமைச்சரவைப் பத்திரத்தின் மூலம் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய கொள்கைகள் பொருளாதார அலுவல்கள் மீள்குடியேற்றம் புனர்வாழ்வளிப்பு வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் கீழ் இயங்கும் ஆட்களையும் ஆதனங்களையும் கைத்தொழில்களையும் புனரமைக்கும் அதிகாரசபை மற்றும் அதனை உள்வாங்கி, உருவாக்கப்பட்ட இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் மூலம் குண்டுவெடிப்பினால் மரணமடைந்தவர்கள், அங்கவீனமடைந்தவர்கள், காயமடைந்தவர்கள், சேதமடைந்த இழப்பீடுகளுக்கான சொத்துக்களுக்கும் மதஸ்தலங்களைப் புனரமைப்பதற்குமான கொடுப்பனவுகளும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படும்.  

மேலதிக விபரங்கள் தொடர்பாக இழப்பீட்டு அலுவலகத்தின் இயக்குனர் ஆனந்த விஜயபால,தொலைபேசி இலக்கம் 011--2575826 அல்லது 011-2575813 ஊடாக தொடர்பு கொள்ளலாம்.    

Tue, 04/30/2019 - 09:58


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை