விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சே கைது

ஈக்குவடோர் நாட்டில் தஞ்சமடைந்திருந்த விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சே (Julian Assange) லண்டன் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டதாக, சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. 

விக்கிலீக்ஸ் நிறுவுனரான ஜூலியன் அசாஞ்சே அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் இரகசியங்களை இணையத்தளங்களில் வெளியிட்டு அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியவர்.

பாதுகாப்பு இரகசியங்களை வெளியிட்ட ஜூலியன் அசாஞ்சேயைக் கைதுசெய்ய அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வந்தது. ஆனால், அவர்களிடம் அகப்படாமலிருக்க  லண்டனிலுள்ள ஈக்குவடோர் தூதரகத்தில் ஜூலியன் அசாஞ்சே தஞ்சமடைந்திருந்தார்.

இதற்கிடையில், ஜூலியன் அசாஞ்சேவுக்கு ஈக்குவடோர் நாட்டுக் குடியுரிமை வழங்கப்படுமெனவும், அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது.

இவ்வாறான நிலையிலேயே, லண்டனிலுள்ள ஈக்குவடோர் தூதரகத்தில் ஜூலியன் அசாஞ்சே இன்று (11) கைதுசெய்யப்பட்டார். 

ஈக்குவடோர் அரசு அவருக்கு அளித்திருந்த பாதுகாப்பை மீளப்பெற்றுள்ள நிலையிலேயே, ஜூலியன் அசாஞ்சே லண்டன் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு,  வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும், சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

2012ஆம் ஆண்டு தஞ்சமடைந்த ஜூலியன் அசாஞ்சே 7ஆண்டுகளுக்கு பின்னர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Thu, 04/11/2019 - 16:49


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை